News March 16, 2024
மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் மே 5 ஆம் தேதி மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க, கோட்ட அளவில் ஏற்கனவே கிடைத்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கலாம் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்
நிர்மலாதேவி நேற்று அறிவித்துள்ளார்…
Similar News
News January 22, 2026
திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
திருச்சி: தொழில் முனைவோர் பயிற்சிகள் அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், மதிப்பு கூட்டல் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு திருச்சி மாவட்ட திட்ட மேலாளர் கார்த்திகேயன் (8610687193) என்பவரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
திருச்சி: பயணிகள் ரயில் ஒருநாள் ரத்து

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து காலை 8:05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும், ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், வரும் ஜன.27ஆம் தேதி ஒரு நாள் மட்டும், கரூர் – திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து, கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


