News March 16, 2024
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் & இபிஎஸ் ஆகிய இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில், சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய முடிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 26, 2025
இந்த வார OTT ரிலீஸ்

*ஹிருதயப்பூர்வம் – ஜியோ ஹாட்ஸ்டார்
*காட்டி – பிரைம்
*ஓடும் குதிரை சாடும் குதிரை – நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்
*சுந்தர காண்டா – ஜியோ ஹாட்ஸ்டார்
*தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் – பிரைம்
*ஓடும் குதிரை சாடும் குதிரை – நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்
*சுமதி வளவு – ஜீ5
News September 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 470
▶குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
▶பொருள்: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.
News September 26, 2025
நட்புக்கு இலக்கணம் அண்ணாமலை: டிடிவி தினகரன்

அண்ணாமலையின் தூண்டுதலே தனது செயல்பாடுகளுக்கு காரணம் என சிலர் சொல்வது முற்றிலும் தவறு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நட்புக்கு சிறந்த இலக்கணம் அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பதில் அளித்துள்ளார் என தெரிவித்த டிடிவி, அவர் எல்லாவற்றையும் கடந்து தனது செயல்பாடுகளால் உயர்ந்த நிலைக்கு வருவார் எனவும் கூறியுள்ளார்.