News March 16, 2024
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். எனினும் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
பிஹார் போல் கோட்டை விட கூடாது: KN நேரு

வாக்காளர் பட்டியலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என DMK நிர்வாகிகளுக்கு KN நேரு அறிவுறுத்தியுள்ளார். பிஹார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது எனவும் ஒன்றிய செயலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், பூத் கமிட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
News August 31, 2025
இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையாகும். வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிகவும் பயனுள்ள வகையில் அமையும். SHARE IT.
News August 31, 2025
இந்தியாவும் சீனாவும் இனி நண்பர்கள்!

PM மோடி-சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பை உலகமே உற்று நோக்குகிறது. இச்சந்திப்பின் போது, இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும் இருநாடுகளின் வெற்றியில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் பேசியுள்ளார். அதோடு, டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது, USA-வுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.