News March 16, 2024

விருதுநகரில் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News

News July 5, 2025

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சிக்கு ரூ.1 கோடி பரிசு

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் 10 ஊராட்சிகளுக்கு விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஜூலை.17 குள் சமர்ப்பிக்கலாம்.

News July 5, 2025

BREAKING சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் பலி 10 ஆக உயர்வு

image

சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் ஜூலை.1 அன்று கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா (28) என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 5, 2025

பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை – போலீஸ்

image

அருப்புக்கோட்டை நகராட்சியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. சாலைகள், பேருந்து நிறுத்தங்களில் பேனர்கள் வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.‌ இந்நிலையில் அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது எனவும், ஏற்கனவே இருந்த பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டவுன் போலீசார் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!