News October 1, 2024
இஸ்ரேல் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கிழக்கு ஆசியா நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் பேசியதாகவும், தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 26, 2025
BREAKING: தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டது. இதனை மாவட்ட கலெக்டர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தள்ளுபடி போக மீதித் தொகையை பயனாளர்கள் விரைந்து செலுத்துமாறு சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தவணையை செலுத்துவதற்கான அவகாசம் 2026 மார்ச் 31 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 26, 2025
நாம் தான் விமானத்தை கண்டுபிடித்தோம்: அமைச்சர்

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலங்களுக்கு முன்பே, இந்தியாவிடம் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மகாபாரத காலகட்டத்தில் டிரோன்கள், ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம்மிடம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என பாஜக MP <<17510319>>அனுராக் தாக்கூர்<<>> கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
News August 26, 2025
AI-ஆல் சினிமாவிற்கு ஆபத்து: அனுராக் எச்சரிக்கை

AI-ஆல் உருவாகும் படங்கள் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எச்சரித்துள்ளார். AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றிவிடும் எனவும், இதனால் திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், AI படங்களை விட்டு நடிகர்கள் வெளியேறவும் கேட்டுக் கொண்டுள்ளார்.