News March 16, 2024
100 நாள் வேலை ஊதியம் ₹400ஆக உயர்த்தப்படும்

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ₹400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் கார்கே, “அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டங்கள் & தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
Similar News
News September 26, 2025
டிரெண்டியான மடோனா செபாஸ்டியன் PHOTOS

பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். சமீபத்தில், லியோவில் விஜய் தங்கையாக மிரட்டினார். மடோனா நடிகை மட்டுமல்லாமல், அருமையாக பாடகியும் தான். இவரது, லேட்டஸ்ட் போட்டோஸ் மேலே உள்ளன. டிரெண்டியாக அசத்தும் மடோனாவை பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க.
News September 26, 2025
தலைவருக்கான பண்பு EPSயிடம் இல்லை: ஆ.ராசா

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிச்சைக்காரன் என்றும், ஒட்டுப்போட்ட சட்டை போட்டவர் எனவும் EPS பேசியது அநாகரிகத்தின் உச்சம் என ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் EPS-க்கு இல்லை என்றும் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை பார்த்துவிட்டு முகத்தை மூடியபடியே வந்தவர் எல்லாம் பிச்சைக்காரன் எனப் பேசுவது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 26, 2025
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் சொத்துப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள நடிகைகளை யார் யார் என்று பார்க்கலாம். அந்த வகையில் (₹220 – ₹250 கோடி ) சொத்துடன் நயந்தாரா முதல் இடத்தில் உள்ளார். 2-ம் இடத்தில் தமன்னா(₹120 – ₹150 கோடி ), 3-ம் இடத்தில் சமந்தா (₹90 – ₹110 கோடி), 4-ம் இடத்தில் த்ரிஷா (₹85 கோடி), 5- இடத்தில் ரஷ்மிகா மந்தனா (₹60 – ₹70) ஆகியோர் உள்ளனர்.