News March 16, 2024
மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 10, 2025
இராமநாதபுரம்: காவல்துறையில் வேலைவாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS தகுதி வாய்ந்த இளைஞர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பித்து தங்கள் கல்வி மற்றும் உடற்திறனை வளர்த்துக் கொண்டு தேர்வில் வெற்றி பெற இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்கள். *ஷேர் பண்ணுங்க
News April 10, 2025
ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: கலெக்டர் தகவல்

தமிழக கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம், மீன்வளத்தை பாதுகாக்க ஏப்.15 முதல் ஜூன்.14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள், இழுவைப் படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் விசைப்படகுகள், இழுவைப் படகு மீனவர்கள் ஏப்.15- ஜூன் 14 வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
மீனவர்களுக்கான இன்றைய(ஏப்.10) வானிலை அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.10) காற்றின் வேகம் 30 கிலோமீட்டர்/மணி முதல் 31 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.