News March 16, 2024

சிவகங்கை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 46 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 8, 2025

சிவகங்கை: அனைத்து சேவையும் ஒரே லிங்கில்..

image

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News August 8, 2025

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வரும் 11.8.2025 அன்று குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. விடுபட்டவர்களுக்கான முகாம்கள் வருகின்ற 18.8.2025 அன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

சிவகங்கையில் நாய் கடித்து 18,033 பேர் பாதிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் மட்டுமே 23 பேர் நாய் கடித்து தடுப்பூசி போட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!