News September 30, 2024
காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகள் செயல்படாது – ஆட்சியர்

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
News August 18, 2025
முன்னாள் இராணுவ வீரர்களின் குறை தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா தலைமையில் மாவட்ட அலுவலக ஆட்சியகத்தின் அலுவலகத்தில் உள்ள குறள் கூட்டரங்கில் முன்னாள் இராணுவ படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரராகள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரர்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
News August 18, 2025
நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இம்மாதம் 27 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இம்மாதம் 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.