News September 30, 2024
தஞ்சையில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உடையவர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, வரும் 31.10.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
தஞ்சை: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
தஞ்சை அருகே குளத்தில் மிதந்த பிணம்

திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தளிகை குளத்தில் வாலிபர் ஒருவரது சடலம் மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியைடந்த மக்கள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை புதுவயல் பகுதியை பெரியசாமி (33) என்பது தெரிய வந்தது.
News August 22, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.21) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.