News September 30, 2024
உக்ரைன் போரில் 6.51 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி?

போரில் இதுவரை 6.51 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய இப்போரில் பலி குறித்து உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 6.51 லட்சம் வீரர்கள், 369 விமானங்கள், 28 கப்பல்கள், 1 நீர்மூழ்கி, 328 ஹெலிகாப்டர்கள், 16,000 ட்ரோன்களை ரஷ்யா இழந்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால், உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும்
தெரிவிக்கவில்லை.
Similar News
News August 16, 2025
இந்தியாவிற்கு மேலதிக வரி இல்லை: டிரம்ப்

புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து டிரம்ப் பேசியுள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மேலதிக வரிவிதிக்க போவதில்லை எனவும், அப்படி வரி விதித்தால் அந்நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய வரிவிதிப்புகளுக்கு பின்னர் ரஷ்யா, இந்தியா போன்ற கஸ்டமரை இழந்துள்ளதாகவும் கிண்டலாக கூறியுள்ளார்.
News August 16, 2025
EPS, விஜய் உடன் கூட்டணி வைப்பது உறுதி: KC பழனிசாமி

BJP-யை கழற்றி விட்டுவிட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க EPS விரும்புவதாக ADMK Ex MP கே.சி.பழனிசாமி புதிய குண்டை போட்டுள்ளார். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், BJP காட்டும் பாதையில் பயணிக்க TTV தினகரன் தயாராகிவிட்டார் என்றும் கூறியுள்ளார். OPS-ன் அரசியல் எதிர்காலம் இனி கேள்வி குறி என்ற அவர், OPS, CM ஸ்டாலினை சந்தித்தது மாபெரும் தவறு என உடைத்து கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
கல்வியில் TN வழியில் கர்நாடகா!

கர்நாடகாவில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அம்மாநில CM சித்தராமையா தெரிவித்துள்ளார். கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் அறிக்கையை சமர்பித்தது. அதில், இரு மொழிக் கொள்கை அவசியம் என கூறியிருந்த நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், சமீபத்தில் மாநிலக் கல்வி கொள்கை வகுக்கப்பட்டது.