News September 30, 2024
GOOD NEWS: ஜியோ மீண்டும் அசத்தல்

3 மலிவு விலை திட்டங்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ₹51, ₹101, ₹151 விலையில் 3 திட்டங்களை ஜியோ களமிறக்கியுள்ளது. இதற்கு ஏற்கெனவே ஆக்டிவ்வில் உள்ள பிளானுடன் சேர்த்து இந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ₹51க்கு ஒரு மாத வேலிடிட்டியுடன் 4G, 5G டேட்டா 3 GB கிடைக்கும். ₹101 ரீசார்ஜ் செய்தால் 6 GB 5G டேட்டாவும், ₹151 ரீசார்ஜ் செய்தால் 9 GB 4G, 5G டேட்டாவும் கிடைக்கும்.
Similar News
News August 11, 2025
3 நாளில் கூலி படம் ரிலீஸ் – ஐகோர்ட் முக்கிய உத்தரவு

ரஜினி, ஆமீர் கான், நாகர்ஜுனா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படம் இன்னும் 3 நாள்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக படத்தை இணையதளத்தில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, இணையதளத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்கள், 5 கேபிள் டிவி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தியேட்டரில் ‘கூலி’ பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?
News August 11, 2025
‘சஞ்சு சாம்சனை CSKக்கு கொண்டுவர முயற்சிப்பேன்’

சஞ்சு சாம்சன் CSK-வில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சஞ்சுவை CSK அணிக்கு கொண்டுவர முயற்சி எடுப்பேன் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். CSK-ல் தோனிக்கு சரியான மாற்றுக் சஞ்சு தான் என சுட்டிக்காட்டிய அவர், அவருக்கு தற்போதே தமிழகத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். சஞ்சு MSD-க்கு சரியான Replacement-ஆ?
News August 11, 2025
இந்த படத்தில் இருப்பது என்ன? கண்டுபிடிங்க பார்ப்போம்!

நியூஸ் படிச்சி படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தை நன்கு கூர்ந்து கவனியுங்கள். பொறுமையாக உற்று பார்த்தால், படத்தில் என்ன உள்ளது என உங்கள் கண்களுக்கு நன்றாக தெரியும். இது போன்று குழப்பும் போட்டோக்களை தான் ‘Optical Illusion’ என்பார்கள். உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட் பண்ணுங்க. பதில் தெரியவில்லை என்றால், முதல் கமெண்ட்டை பாருங்க.