News March 16, 2024

நாகை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 68 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21- 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

நாகை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் புது பள்ளி தெருவில் தொடங்கி கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் செல்ல உள்ளது. எனவே ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள தற்காலிக பந்தல் விளம்பர தட்டிகள் மற்றும் ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுமாறு நாகை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News November 13, 2025

நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!