News September 30, 2024

பி.எட். தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

image

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வு அக். 14 முதல் 19 வரை நடைபெறுகிறது. அக். 23-இல் முதலாமாண்டு வகுப்பு தொடங்குகிறது.

Similar News

News August 13, 2025

ஆகஸ்ட் 13: வரலாற்றில் இன்று

image

*1926 – புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்.
*1952 – நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்.
*1963 – நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம்.
*1969 – நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தனர்.
*2004 – 28-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

News August 13, 2025

ஹிமாச்சலில் 229 பேர் பலி: சேத மதிப்பு ₹2000 கோடி

image

ஹிமாச்சலில் பருவமழை மற்றும் விபத்துகளால் 229 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலச்சரிவு, வெள்ளம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 119 பேரும், சாலை விபத்துகளில் 110 பேரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 395 சாலைகள், 669 டிரான்ஸ்பார்மர்கள், 529 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாநிலத்தின் மொத்த பொருளாதர இழப்பு சுமார் ₹2,007.4 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

News August 13, 2025

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

image

*புரட்சியில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களின் பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் உண்மையான மாற்றம் நடக்கும்.
*போராடும் நேரத்தில் அதை வீண் முயற்சி என்பார்கள், வெற்றியை அடைந்த பிறகு அதையே விடாமுயற்சி என புகழ்வார்கள்.
*கஷ்டங்கள் இல்லையெனில், போராடும் ஆவல் நமக்கு முற்றிலும் மறைந்து விடும்.
* உன்னை அதிகமாக விமர்சிக்கும் மனிதன் உன்னைப் பற்றி மிகுந்த அச்சத்துடன் இருக்கிறான்.

error: Content is protected !!