News March 16, 2024
ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 141 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
இந்த மாத இறுதிக்குள் வைக்க வலியுறுதல்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்களில் வரும் 30-ம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் தளலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
News April 19, 2025
நீதியை நிலைநாட்டும் கொங்கலம்மன்!

கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு, மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது. இங்கு கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT!
News April 19, 2025
கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை வழங்கும் முகாம்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்