News March 16, 2024
புதிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம்

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை வேறு, பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு. புதிய கல்விக்கொள்கையை பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு குழு அமைத்துள்ளோம். அக்குழுவின் அறிக்கைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News September 5, 2025
100 வயதை கடந்து வாழும் இந்தியர்கள் எத்தனை பேர்?

‘100 வருஷம் உன் கூட வாழனும்டா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில், யாருக்குத்தான் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது. இப்படியான வாழ்வைதான், அதாவது 100 ஆண்டுகளைக் கடந்து உலகில் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு 4-வது இடம். ஆம், இந்தியாவில் 37,988 பேர் 100 வயதை கடந்த நிலையில் வாழ்வதாக UN 2025 Projections தரவு கூறுகிறது. 100-வது வயதில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
News September 5, 2025
BREAKING: கட்சியில் இருந்து விலகுகிறார்..

BJP விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான <<17613979>>நிர்வாகிகள் பட்டியலில்<<>> தனது பெயர் இடம் பெறாததால், X தளத்தில் கேசவ விநாயகம் உள்ளிட்டோரை கடுமையாக சாடியுள்ளார். அண்ணாமலை போன்ற ஆளுமைக்காகவே கட்சியில் சேர்ந்ததாகவும், தற்போது சிறுபான்மையினரை திட்டமிட்டு நொறுக்குவது வருத்தமளிப்பதாகவும் அதிரடி கருத்தை பதிவிட்டுள்ளார்.
News September 5, 2025
நடிப்பிற்கு Bye-Bye சொல்லும் நடிகை?

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், ரஜித் இப்ரான் எனும் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இன்னும் இரு மாதங்களில் துபாயில் நடைபெறவிருக்கும் அத்திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என கூறப்படுகிறது. அத்துடன் இனி படங்களில் நடிப்பதற்கும் End Card போட முடிவெடுத்திருக்கிறார் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.