News March 16, 2024
22 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸாகும் ‘அழகி’

தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் 2002இல் வெளியான படம் ‘அழகி’. இப்படம் 22 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்த செய்தியை X தளத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், “22 வருடங்களுக்கு பிறகு மார்ச் 29ஆம் தேதி மீண்டும் என் ‘அழகி’யை பாக்க போறேன்! என் மனசுக்குள்ள இருக்குற ஆசை யாருக்கு புரியும்?!” என குறிப்பிட்டுள்ளார். யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்?
Similar News
News August 5, 2025
சீன நிறுவனங்களுடன் கைகோர்ப்பா? அதானி மறுப்பு

சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் EV பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. EV கார் உற்பத்தி நிறுவனமான BYD மற்றும் Beijing Welion New Energy Technology நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும், இந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது என்றும் மறுத்துள்ளது.
News August 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 418 ▶குறள்: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. ▶பொருள்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
News August 5, 2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.