News March 16, 2024
அரியலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் ராஜாஜி நகர் மற்றும் கொல்லாபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், முதியோர்கள் பொழுது போக்குவதற்கான வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்த ஆட்சியர், முதியோர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
News November 7, 2025
அரியலூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
4.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
அரியலூர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

அரியலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். SHARE IT NOW…


