News March 16, 2024
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 103 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
News August 8, 2025
தி.மலையில் வரலட்சுமி நோன்பிற்கு இதை செய்யுங்க

வரலட்சுமி நோன்பு, லட்சுமி தேவியின் அருளை வேண்டி சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் ஒரு புனிதமான விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஆக்.08) அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியில் வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை விமர்சையாக நடைபெறும். ஷேர் பண்ணுங்க! <<17338872>>தொடர்ச்சி<<>>
News August 8, 2025
திருவண்ணாமலையில் குடல்புழு நீக்க முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 அன்று குடல்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஆகஸ்ட் 18 அன்று மீண்டும் மாத்திரைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 6,10,000 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.