News September 30, 2024
ராமநாதபுரம் அருகே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

ராமநாதபுரம் எம்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் கணேஷ் முருகன் (39). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இன்று (செப்.29) மாலை தகராறு ஏற்பட்டது. இதில் கணேஷ் முருகனின் மனைவி ரோஜா மலரை சிலர் தாக்கியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கணேஷ் முருகன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கணேஷ் முருகனை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
ராமநாதபுரம் பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

ராமநாதபுரம் மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.
News August 28, 2025
ராமநாதபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் https://www.drbramnad.net/ என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News August 28, 2025
BREAKING இராம்நாடு கார் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிராமம் அருகே இன்று இரவு 9 மணியளவில் இசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெண் ரீட்டாமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட இருவாகனங்களிலும் வந்த ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.