News March 16, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 32 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

திருப்பத்தூர்: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc, BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9-க்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 26, 2025

திருப்பத்தூர்: பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே, அரசு பேருந்தில் சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ, நடத்துனர் மரியாதை குறைவாக நடத்தினாலோ, உங்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News August 26, 2025

காலைஉணவு திட்ட முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.25) முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (26) காலை உணவுத்திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் விரிவுப்படுத்தி துவக்கி வைக்க உள்ளதையொட்டி, அதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்க்கொள்ள உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு கூட்டம் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைப்பெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!