News September 29, 2024
IPL 2025: டிமிக்கி கொடுக்கும் வீரர்களுக்கு செக்..!

2025 IPL மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கான விதிகளை BCCI கடுமையாக்கியுள்ளது. அதன்படி, மெகா ஏலத்தில் பெயரை பதிவு செய்யாத வீரர்கள், இனி மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. அதேபோல், ஒரு அணியால் வாங்கப்பட்ட பின், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு அடுத்த 2 IPL தொடர்களில் விளையாட தடை விதிக்கப்படும்.
Similar News
News August 9, 2025
சஞ்சுவை எடுக்க இரு அணிகள் ஆர்வம்

RR-ல் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவர் CSK-வுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, CSK போன்றே KKR-க்கும் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதால், அவர்களும் சஞ்சுவை எடுக்க முன்வரலாம். கடந்த IPL-ல் ₹24 கோடிக்கு ஏலம் எடுத்த வெங்கடேஷ் ஐயரை விடுவித்தால் அவர்களால் சஞ்சுவை எடுக்க முடியும் என்றார்.
News August 9, 2025
இந்திய அரசியலில் தந்தையை விஞ்சிய மகன்கள்!

அன்புமணி கை ஓங்கியுள்ள நிலையில், இந்திய அரசியலில் தந்தையை விஞ்சிய மகன்களின் பட்டியல் இதோ: * 38 வயதில் தன்னை CM ஆக்கிய முலாயம் சிங்கை, SP தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார் அகிலேஷ் * 2006-ல் தேவகவுடாவின் எதிர்ப்பை மீறி CM பதவிக்காக பாஜகவுடன் சேர்ந்த குமாரசாமி, கட்சியையும் தன்பிடிக்குள் கொண்டுவந்தார் * மோடியை எதிர்த்ததால் யஷ்வந்த் சின்ஹாவை விமர்சித்த ஜெயந்த் சின்ஹா, பாஜக முக்கிய தலைவரானார்.
News August 9, 2025
300 கிமீ தொலைவில் பாக்., விமானத்தை வீழ்த்திய இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, நம் விமானப்படை தளபதி ஏபி சிங் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக எல்லையில் இருந்து 300 கிமீ தொலைவில், இந்திய விமானங்களை கண்காணித்த AWACS ரேடார் விமானத்தை, ரஷ்ய தயாரிப்பான S-400 வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார். 300 கிமீ தொலைவில் உள்ள விமானத்தை surface-to-air-ல் வீழ்த்தியது ஒரு உலக சாதனையாகும்.