News March 16, 2024
நெல்லை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 45 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
ரூ.50,000 சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <
News April 18, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.