News September 29, 2024

Flu தடுப்பூசி அவசியம்!

image

தமிழகத்தில் சமீபமாக பரவி வரும் Flu வைரஸின் (H1n1, H2n2) வீரியம் அதிகமாக உள்ளது. இதனால், பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், இதய கோளாறு, சர்க்கரை நோய் உள்ளவர்களை, இந்த தொற்றின் தீவிரம் நிமோனியா பாதிப்பு வரை கொண்டு செல்கிறது. இதற்கு தீர்வாக அனைவரும் Flu தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அண்மையில் Flu வந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை.

Similar News

News August 10, 2025

உரிமைத் தொகை.. உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு

image

ஜூலை 15-ம் தேதி முதல் சுமார் 12 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், தகுதியுள்ள அனைவரும் ₹1,000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். நீங்க விண்ணப்பித்து விட்டீர்களா?

News August 10, 2025

மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை: அன்புமணி

image

மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான் என்றும் அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான் எனவும் சாடியுள்ளார். தமிழக அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.

News August 10, 2025

Online Shopping-ஆல் வரும் நோய்.. எச்சரிக்கும் டாக்டர்கள்!

image

டிஜிட்டல் உலகில் எது தேவை என்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆனால், அதனால், Compulsive Buying Disorder (CBD) என்ற மனநல பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, கண் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம். எனவே, உஷாரா இருங்க!

error: Content is protected !!