News September 29, 2024

இராமநாதபுரம் நகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு

image

இராமநாதபுரம் நகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் அருகே உள்ள ஊராட்சிகளான அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை, பேராவூர், இளமனூர், பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, ராஜசூரியமடை, புத்தேந்தல் ஆகிய எட்டு ஊராட்சிகள் ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் ராமநாதபுரம் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 117118 ஆக உயரும்.

Similar News

News August 13, 2025

ராமநாதபுரம்: ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. இன்று (ஆகஸ்ட்-13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி. ஜி.சந்தீஷ் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

News August 13, 2025

ராமநாதபுரம்: செல்போனை தொலைப்பவரா நீங்கள்..!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த <>APP<<>>-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப்மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த APP நம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மனு

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகனிடம், நாட்டுப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி சேனாதிபதி சின்னத்தம்பி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

error: Content is protected !!