News March 16, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 33 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி; நாய்கள் வெறிச்செயல்!

image

போச்சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவன். நேற்று (ஜன.24) அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த இவர் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் இழுத்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் தெரு நாய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News January 25, 2026

கிருஷ்ணகிரி மக்களே! OTP வருதா? ALERT!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் தலைமறைவு!

image

உத்தனப்பள்ளி அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (69). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் இடையே நேற்று (ஜன.24) நிலப்பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் சரஸ்வதி, லக்‌ஷ்மணன், மதுகுமார் ஆகியோர் தாக்கியதில் படுகாயயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!