News September 29, 2024
ஏடிஎம் ஐ உடைத்தது ஏன்? கைதான வாலிபர் விளக்கம்

குளச்சல் பகுதியில் ஏடி.எம்-ஐ உடைத்து கொள்ளை அடிக்க முடிந்த அசாமி சேர்ந்த சம்சுல் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினரை பார்க்க வந்ததாகவும், அவருடன் சண்டை போட்டுவிட்டு அறையை காலி செய்து செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் ஐ உடைத்து பணத்தை எடுக்க முயன்றதாகவும் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்
Similar News
News August 18, 2025
குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
News August 18, 2025
முன்னாள் இராணுவ வீரர்களின் குறை தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா தலைமையில் மாவட்ட அலுவலக ஆட்சியகத்தின் அலுவலகத்தில் உள்ள குறள் கூட்டரங்கில் முன்னாள் இராணுவ படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரராகள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரர்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
News August 18, 2025
நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இம்மாதம் 27 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இம்மாதம் 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.