News March 16, 2024

விருதுநகர் அருகே மதுவால் ஏற்பட்ட விபரீதம் 

image

அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா. மணிகண்டன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார் இதனால் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (15.3.24) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 13, 2026

விருதுநகர் : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி அருகே மாரனேரி போலீசார் காக்கிவாடன்பட்டி எஸ்.ஆர்.காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தகர செட்டில் சட்ட விரோதமாக ஷாட் வகை பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாரனேரி வரதகோபால்சாமிநகரை சேர்ந்த ரத்தினம் மகன் ஹேமத்ராஜன்(39) என்பவரை கைது செயதனர்.

News February 12, 2026

விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப் 13) நெல்லை, தென்காசி, தேனி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..

error: Content is protected !!