News September 29, 2024

சேலம் எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை?

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனை சந்தித்து வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

சேலம்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008033>>(தொடர்ச்சி 1/2)<<>>

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

News July 9, 2025

பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

image

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

error: Content is protected !!