News March 16, 2024
ELECTORAL BONDS : உண்மையை வெளியிட்ட பத்திரிகையாளர்

எஸ்.பி.ஐ., வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ED சோதனை நடந்த பெரிய நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக கட்சிகளுக்கு வழங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த உண்மை வெளியாக காரணமாக இருந்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இதழியல் துறையில் புலிட்சர் விருதுப் பெற்ற அவரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
ஜே.பி.நட்டாவுக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

TN விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடிக்கான யூரியா, டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 28, 2025
திறனாய்வு தேர்வு… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, நாளை முதல் பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.4 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
SIR நடவடிக்கைக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமனதுடன் வரவேற்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தகுதியுள்ளவர்களுக்கு ஓட்டுரிமை உறுதி செய்யப்படும் என்றும் போலியான வாக்காளர்கள் முற்றிலும் நீக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். SIR நடவடிக்கையானது, நேர்மையான வாக்காளர்களுக்கு நம்பிக்கையையும், புதிதாக சேரும் நபர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கும் என்று SM-ல் பதிவிட்டுள்ளார்.


