News March 16, 2024
“இப்பவும் நான் தான் ஒருங்கிணைப்பாளர்”

அதிமுக ஒருங்கிணைப்பாளராக 2025 டிச.26 வரை தொடர்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது. 2022 ஜூன் 28ஆம் தேதி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பழனிசாமி விலகிவிட்டார். எனவே, வழக்கு நிலுவையில் இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைப்பாளரான தான் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வரவுள்ளது.
Similar News
News April 20, 2025
‘உயிர் உங்களுடையது தேவி’.. த்ரிஷா க்யூட் போட்டோஷூட்

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போதும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். இளசுகளை கவரும் வகையில் இன்ஸ்டகிராமில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சேலை அணிந்து த்ரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ‘Cuteness overload’, ‘Gorgeous’ என ரசிகர்கள் கமெண்ட்டில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
News April 20, 2025
திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக..!

பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநாட்டுக்கான அழைப்பிதழை பாமக மாவட்டச் செயலாளர் சரவணன் கொடுக்க, அதனை சிரித்த முகத்துடன் திருமாவளவன் பெற்றுக் கொண்டுள்ளார். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். 2011-ல் திமுக கூட்டணியில் பாமக – விசிக இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News April 20, 2025
வரலாற்றில் இன்று!

➤ 1889 – சர்வாதிகாரியாக வரலாற்றில் அறியப்படும் ஹிட்லர் பிறந்த நாள். ➤ 1950 – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறந்த நாள். ➤ 1972 – யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது. ➤ 2012 – பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டு 127 பேர் உயிரிழப்பு. ➤ 2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் பலி.