News September 29, 2024
இன்று இந்த 11 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும், நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News August 13, 2025
‘மதராஸி’ படத்தின் கதை இதுதானா?

‘மதராஸி’ படம் அடிப்படையில் காதல் கதையாம். இந்த காதலால் தமிழ்நாட்டில் பணியாற்றும் படக்குழுவிற்கும், வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தியாகங்கள், பழிவாங்கலை சேர்த்து முருகதாஸ் படமாக உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். முன்னதாக, கஜினியும், துப்பாக்கியும் சேர்ந்ததுதான் இந்த படம் என முருகதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 5-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
News August 13, 2025
இந்தியாவில் நுழைய போட்டி போடும் உலக நிறுவனங்கள்

ஸ்டார்லிங்க்கிற்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், உலகளவில் உள்ள Satcom நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. லக்ஸம்பர்க்கின் Intelsat, பிரிட்டனின் Inmarsat, சிங்கப்பூரின் டெலிகாம், கொரியாவின் KT SAT, தாய்லாந்தின் IPSTAR, இந்தோனேஷியாவின் PT Telekomunikasi உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்துள்ளன. ஏற்கெனவே அமேசானின் Kuiper அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.
News August 13, 2025
ODI தரவரிசை: மாஸ் காட்டும் இந்தியாவின் டாப் 3!

வெளியிடப்பட்டுள்ள ODI தரவரிசையில், இந்தியாவின் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கில் 1-ம் இடத்திலும், ரோஹித் 2-ம் இடத்திலும், கோலி 4-ம் இடத்திலும் உள்ளனர். இது ODI ஃபார்மெட்டில் இந்திய பேட்டர்களின் ஆதிக்கத்தை காட்டுகிறது. ODI-யில் இருந்து ரோஹித், கோலி இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனத்திற்கு இது பதிலடியாகவும் அமைந்துள்ளது.