News September 29, 2024
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கடந்த செ10 முதல் செ24 வரை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 2412 வீரர்களுக்கு இன்று மாலை4 மணி அளவில் பட்டரைபெரும்புதூர் உள்ள சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடக்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
ALERT: திருவள்ளூரில் கடலுக்கு செல்ல தடை

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசம். எனவே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News August 19, 2025
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை வாய்ப்பு மோசடி ”வீட்டிலிருந்தே வேலை” தினமும் ரூபாய் 2000 வருமானம் என்று வாட்ஸ்அப்மெயில் மூலம் அழைப்பர். ஆரம்பத்தில் சிறிய வேலை கொடுத்து ரூ.100 – 500 போலியான சம்பளம் தருவார். அதன் பிறகு “பெரிய ப்ராஜெக்ட்” எடுக்க டெபாசிட் பணம் கொடுக்க வேண்டும் சொல்லி ஏமாற்றுவார்கள். பணம் அனுப்பியவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.
News August 18, 2025
3 கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அண்ணா மக்கள் இயக்கம், சமத்துவ மக்கள் கழகம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், அவற்றின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு வரும் 26 ஆம் தேதி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.