News September 28, 2024

அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்: ஆட்சியர்

image

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 2023-24ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம், மக்கள் திட்டமிடல் இயக்கம் போன்றவை குறித்து விவாதிக்க ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

புதுக்கோட்டை: பெல் நிறுவனத்தில் வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

புதுக்கோட்டை பற்றிய சுவாரசிய தகவல்கள்!

image

➡️புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய கலாச்சார மாவட்டமாகும்
➡️தனி மாவட்டமாக 1974 ஆண்டு உருவானது
➡️பரப்பளவு: 4663 ச.கி.மீ
➡️மக்கள் தொகை:1618345
➡️அஞ்சல்: 17
➡️மருத்துவமனைகள்: 14
➡️வங்கிகள்: 18
➡️கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்: 16
➡️தமிழக அளவில் பழங்கால பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

இந்திய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அழைத்து பேசி தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆதரவு போராட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மண்டல தொழிலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!