News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News November 12, 2025
மாணவர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? சீமான்

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025-ஐ தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்திருத்தத்தினால், கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தும் பட்சத்தில், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஏழை எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என்றும் சீமான் சாடியுள்ளார்.
News November 12, 2025
போஸ் தருவதில் எங்கள அடிச்சுக்க ஆளேயில்ல.. PHOTOS

பெரும்பாலும் புகைப்படங்களில் குறிப்பிட்ட சில விலங்குகள் மிகவும் அழகாக தோன்றும். அதற்கு காரணம், அவற்றின் வண்ணமயான நிறங்கள், முக வடிவமைப்பு என்பதையும் தாண்டி, பெரும்பாலும் அவை தரும் போஸ்கள் தான். அப்படி அருமையாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள கடல் விலங்குகளின் போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை கவர்ந்த விலங்கு எது?
News November 12, 2025
அரசு விடுமுறையில் மாற்றமா?

14/04/2026 சித்திரை முதல்நாள் <<18262209>>விடுமுறை<<>> மீண்டும் இணையத்தில் மோதலாக மாறியுள்ளது. தமிழர்களின் நம்பிக்கைகளை சீர்குலைத்து வந்த திமுகவினருக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு நன்றி என பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டார். அதற்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் 2023, 2024, 2025 விடுமுறை பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஏப்.14 அன்று தமிழ்ப் புத்தாண்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.


