News September 28, 2024
கரூரில் மினி டைட்டல் பார்க்

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறுசிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ2,100 கோடி கடன் வழங்கபடும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜா அறிவித்தார்.அதில் கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி.துறையில் தலா 500 பேருக்கு வேலையளிக்க, புதிய மினி டைட்டல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 1, 2025
கரூர்: இன்று 11 மணிக்கு..! மக்களே ரெடியா

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று நவ.1-ம் தேதி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கிராம மக்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் தெரிவிக்கலாம். (SHARE)
News November 1, 2025
கரூர்: வாகனம் மோதி விபத்து!

பில்லாபாளையம் அடுத்த சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்த சஞ்சீவிராமன்(35). இவர் நேற்று தனது பைக்கில் வீரக்குமாரன்பட்டி சாலையில் தனது தோட்டத்திற்கு சென்றபோது எதிரே மகுடீஸ்வரன் ஒட்டி வந்த தோஸ்த் வாகனம் மோதியதில் சஞ்சீவிராமன் வலது கால் தொடையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அவரது தந்தை புருஷோத்தமன் புகாரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
News November 1, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் உள்ள எக்விடாஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை முகாம் நாளை இன்று நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய வேண்டுமென கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


