News September 28, 2024

கார் பந்தய அணியை தொடங்கிய அஜித்

image

‘அஜித் கார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார். இந்த அணியின் ரேஸிங் ஓட்டுநராக பெல்ஜியமைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் செயல்படுவார் என்றும் ஐரோப்பாவில் நடக்கும் 24H பந்தயத்தில் போர்ஷே 992 GD3 CUP பிரிவில் இவ்வணி பங்கேற்கும் எனவும் அஜித்தின் மேலாளர் கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்து அஜித் ரசிகர்களும், குறிப்பாக கார் ரேஸிங் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

கால் பதிக்க முடியாத இடங்கள்

image

உலகில் சில இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு, ரகசியம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கால் பதிக்க முடியாத இடம் ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News September 18, 2025

செங்கோட்டையன் விவகாரம்: பாஜக புதிய முடிவு

image

செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜகவினருக்கு B.L.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், உள்கட்சி பிரச்சனை போன்றவற்றை தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும் எனவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். முன்னதாக, ஒன்றிணைப்பு விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கருத்தை சுட்டிக் காட்டி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 18, 2025

கல்யாணம் கனவாவே போயிடுமா சார்..

image

பொருளாதாரம், சமூக மாற்றங்கள், தொழில் இலக்கு உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது பலரும் சிங்கிளாக இருக்கவே விரும்புகின்றனராம். அதிகபட்சமாக, ஸ்வீடனில் 50% பேர் சிங்கிளாகவே வாழ்கின்றனராம். ‘அமைதியே பிரதானம்’ என்பதாலேயே சிங்கிளாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக நார்வே, பின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் 25% பேர் (18 – 35 வயது) சிங்கிளாக உள்ளனராம். நீங்க எப்பிடி?

error: Content is protected !!