News September 28, 2024

கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

image

காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கான உத்தரவில், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

4-வது நாளே பிரேமலதா அதிர்ச்சி

image

கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது. பிப்.12-க்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், 4-வது நாளான நேற்று (பிப்.9) விருப்ப மனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லை என்பதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

News February 10, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News February 10, 2026

செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

image

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.

error: Content is protected !!