News September 28, 2024
ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
Similar News
News October 22, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 22, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 ஏரிகள் நிரம்பியது

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொன்னை பாராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 396 ஏரிகளில் 192 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 32 ஏரிகள் 76%-99% நிரம்பியுள்ளதாகவும், 43 ஏரிகள் 50%-75% வரை நிரம்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
இராணிப்பேட்டை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (22.10.2025) வெளியிடப்பட்ட அறிவிப்பில், மழைநீரால் நிரம்பிய குளங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீந்தல் அல்லது விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.