News September 28, 2024
தர்மபுரியில் கடை அடைப்பு அறிவிப்பு

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த கோரி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மனி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதேசமயம் பென்னாகரத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க பெருமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தருமபுரி: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? இனி செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் இந்த <
News September 18, 2025
தருமபுரி: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

தருமபுரி பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 18, 2025
தர்மபுரியில் நூதன மோசடி… உஷார்!

பென்னாகரம் ஏரியூர் பகுதியில் அசோக் என்ற இளைஞருக்கு 8046852000 என்ற எண்ணில் இருந்து கால் வந்தது. யூபரில் இருசக்கர வாகனம் மூலம் ரைடர்ராக பணியை தொடங்கி மாதத்திற்கு 40 முதல் 60 ஆயிரம் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறி பதிவு செய்ய 2000 ரூபாய் பணம் கட்ட வேண்டி இருப்பதாக கூறி மோசடி செய்துள்ளனர். யூபர் செயலில் பணிபுரிய முன்பணம் தேவையில்லை. இது போன்ற மோசடிகளில் ஏமாந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.