News September 28, 2024
விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் சிறப்பு ரயில்

தாம்பரத்திலிருந்து, விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில், வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. திங்கள், வியாழன், மற்றும் சனி ஆகிய நாட்களில் தாம்பரம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் இரவு 7 மணிக்கு வருகிறது. மறுநாள் காலை 5.55க்கு ராமநாதபுரம் சென்று அடையும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
Similar News
News August 5, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்டு 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
விழுப்புரம் BC&MBC மக்களின் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விழுப்புர மாவட்ட BC&MBC நல அலுவலரை (04146 223264) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்
News August 5, 2025
விழுப்புரம்: இளம் பெண் மாயம் – போலீஸ் விசாரணை

விழுப்புரம் திரு.வி.க வீதியை சேர்ந்தவர் அன்சாரி இவரது மகள் குல்சாத் பேகம் (23), இவர் நேற்று (ஆகஸ்ட் 4) வீட்டிலிருந்து மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.