News September 28, 2024
மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள்

*அசாத்தியம் என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் வார்த்தை. புத்திசாலிகள் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கி எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறார்கள்.
*வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி. *அனைவரையும் ஏழைகளாக்குவதற்கான சிறந்த வழி, செல்வத்தின் சமத்துவத்தை வலியுறுத்துவதுதான்.
Similar News
News September 15, 2025
68,000 பூத்களில் ஒன்றாக உறுதிமொழி ஏற்ற திமுகவினர்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் CM ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
News September 15, 2025
RECIPE: சுவையான ஹெல்தி கம்பு வடை!

கம்பில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கும், புரதம் பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கம்பில் வடை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*கம்பு, உளுந்தம் மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வட்டங்களாக தட்டவும்.
*இவற்றை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு வடை ரெடி. SHARE.
News September 15, 2025
‘தமிழ்நாடு’ அடையாளம் கொடுத்த தலைவன்!

திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்க விதை போட்ட பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று. தாய்த்திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டுவர், மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் கட் அண்ட் ரைட்டாக கூறினார். பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு இருக்கும் வரை தமிழ்நாடு என்றைக்கும் அண்ணாவை மறக்காது! உங்களுக்கு அண்ணா என்றால் நினைவுக்கு வருவதென்ன?