News September 28, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 66 ▶ குறள்: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். ▶ பொருள்: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
Similar News
News January 10, 2026
அந்தரங்கத்தை கேட்ட ஆசிரியர்: மாணவிக்கு நேர்ந்த கொடுமை

ஹைதராபாத் அரசுக் கல்லூரி ஒன்றில் இந்த கொடுமை நடந்துள்ளது. இண்டர்மீடியட் படிக்கும் 17 வயது மாணவி கல்லூரிக்கு தாமதமாக வந்திருக்கிறார். காரணம் கேட்டதற்கு, தனக்கு பீரியட் ஆனதால் தாமதமானதாக கூறியுள்ளார். ஆனால், லெக்சரர்களோ அதற்கு என்ன ஆதாரம் எனக் கேட்டு, சக மாணவர்கள் முன் அவமானப்படுத்தினர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன் மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
News January 10, 2026
ராசி பலன்கள் (10.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 9, 2026
பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள் இவையே!

<<18785984>>NDA கூட்டணியில்<<>> பாமகவுக்கு 17 (அ) 18 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் இதோ! திருப்போரூர், காஞ்சி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர், பூம்புகார்.


