News September 27, 2024
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் (109) உடல்நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியைச் சேர்ந்த அவர், விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர், தான் விவசாயம் கற்ற வேளாண் பல்கலை. விவாதக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.
Similar News
News January 25, 2026
திமுக கூட்டணியில் ராமதாஸ்? திருமா ரியாக்ஷன்

பாமக (அன்புமணி), அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபற்றி திமுக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் மாற்றம் இல்லை (பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது) என்றும் அவர் கூறினார். முன்னதாக, ராமதாஸ் பெறாத பிள்ளை திருமா என பாமக MLA அருள் கூறியிருந்தார்.
News January 25, 2026
தவெக கூட்டணி: விஜய் முன்னிலையில் KAS கூறினார்

விஜய் உடன் இணைந்த பிறகு தான் செல்லும் இடமெல்லாம் செல்பி எடுக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி; அது தவெகவால் மட்டுமே முடியும் என்றார். மேலும், கூட்டணி இல்லை என கவலை வேண்டாம்; தமிழகம் முழுவதும் நமக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் வெற்றி உறுதி என்றார். உங்கள் கருத்து என்ன?
News January 25, 2026
திமுகவுக்கு இறுதி தேர்தல்: EPS

4-ல் ஒரு பங்கு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றாததால், அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதாக EPS சாடியுள்ளார். சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது எனவும், வரும் தேர்தல் தான் அவர்களுக்கு கடைசி தேர்தல் என்றும் விமர்சித்தார். மேலும், தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் ஓரிரு நாள்களில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.


