News September 27, 2024
என் உயிர் உங்கள் காலடியில்: செந்தில் பாலாஜி உருக்கம்

சென்னை விமான நிலையத்தில் CM ஸ்டாலினை சந்தித்து பேசிய பின் செந்தில் பாலாஜி, தனது x பக்கத்தில் சிறைவாசம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், 471 நாள்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில் உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும், நிமிடமும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என்றும் குறிப்பிட்டுள்ளார். தாயுமானவராய் தாங்கினீர்கள், என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என்றும் நெகிழ்ந்துள்ளார்.
Similar News
News January 17, 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகவுள்ளாரா?

திமுக கூட்டணியில் ராமதாஸை இணைக்க திமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக திருமாவை அவர்கள் சமாதானம் செய்து வருகிறார்களாம். ஆனால் இதில் உடன்பாடு இல்லாததால், ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென திருமா, திமுக தலைமையிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுமா என தவெக கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறதாம்.
News January 17, 2026
Gmail-ல் தப்பா Mail அனுப்பிட்டீங்களா? இதோ தீர்வு

Gmail-ல் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்யமுடியும். இதற்கு, ➤Desktop-ல் உள்ள Gmail-ஐ Login பண்ணிக்கோங்க ➤Settings ஆப்ஷனுக்கு சென்று, General Settings-ஐ க்ளிக் செய்யவும் ➤அதில் ‘Undo Send’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதில் 30 Seconds என டைம் செட் பண்ணிக்கோங்க. இவ்வாறு செய்தால், நீங்கள் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்ய உங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். பலருக்கும் பயனளிக்கும், SHARE THIS.
News January 17, 2026
FLASH: புதிய முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

எந்தக் காலத்திலும் தனிக் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு, OPS மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.


