News September 27, 2024

X தளத்தில் சண்டையிடுவதால் அதன் உரிமையாளருக்குதான் லாபம்

image

தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக எதிரேதிர் தரப்பினர் X தளத்தில் கருத்துகளை பதிவிட்டு சண்டையிட்டு கொண்டிருந்தால், நமக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. அதனால் அதன் உரிமையாளருக்குதான் லாபம் கிடைக்கும் என மதுரை ஐகோர்ட் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாமிர்தம் சர்ச்சை கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி வினோத் பி செல்வத்தின் மீது வழக்கு பதியாததால் முன்ஜாமின் மனு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 17, 2025

மதுரை: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 17, 2025

மதுரை மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா

image

மதுரை மாநகராட்சி சிறப்பு மாமன்ற கூட்டம் மதுரை மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் கூட்டம் முடிந்தும் வெளியேறாமல்,45 வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளி தனது வார்டில் கழிவுநீர் அதிகமாக செல்வதால் பலமுறை மாநகராட்சி இடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையிலிலும் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

News October 17, 2025

மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை இவ்வளவா.?

image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் ரொக்கமாக ரூ. 90.20 லட்சமும், பலமாற்று பொன் இனங்கள் 195 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 792 கிராமும், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 202-ம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றன.

error: Content is protected !!