News September 27, 2024

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சொத்து தகராறு காரணமாக அவரை கடந்த 2019 ஆண்டு முத்தீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்தார். அவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று கொலை குற்றவாளி முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

Similar News

News November 3, 2025

தேனி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

தேனி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 3, 2025

தேனி: ரூ.10,000 அபராதம் விதித்த வனத்துறை

image

கம்பமெட்டு சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்டுவதற்காக ரெக்சின் கழிவுகளை எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளர் சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News November 3, 2025

இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் தலைமையில் காலை 10.30 மணிக்கு மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள். அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

error: Content is protected !!