News September 27, 2024

மேல்மலையனூரில் தீ வைத்துக் கொண்ட நபர்

image

மேல்மலையனூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மோகன்ராஜ் என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், தற்போது தீ காயங்களுடன் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

விழுப்புரத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று (செப்.1) பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களாகச் சமர்ப்பித்து நிவர்த்தி பெறலாம். மேலும், இந்தக் கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 31, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டம் மாவட்டத்தில் இன்று(ஆக.31) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 31, 2025

“திண்டிவனம் சிறுமி சாதனை படைத்துள்ளார்.”

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த சிறுமி மித்ரா, 54 சர்வதேச நிறுவனங்களின் லோகோக்களை பார்த்து அவற்றின் பெயர்களை 27 நிமிடங்களில் கூறி, உலக சாதனைப் புத்தகமான “வோல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்”இல் இடம்பிடித்துள்ளார். மிகக் குறைந்த வயதிலேயே பெற்றுள்ள இச்சாதனை, திண்டிவனம் மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. குடும்பத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!