News September 27, 2024
செஞ்சி கோட்டையில் நேரடி ஆய்வில் யுனெஸ்கோ பிரதிநிதி

செஞ்சி கோட்டையில், யுனெஸ்கோ பாரம்பரிய தொல்லியல் சின்னமாக அறிவிக்க, மத்திய தொல்லியல் துறையினர் முன்னிலையில், யுனெஸ்கோ பிரதிநிதி hwajong lee icomos ஆய்வு மேற்கொண்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு இடத்திலும் பார்வையிடுகிறார். நமது தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
Similar News
News August 13, 2025
BREAKING: விழுப்புரம் பள்ளியில் உயிரிழந்த மாணவன்

விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை (ஆக.13) 11ஆம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காலை பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவர் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.மாணவன் உயிரிழப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,காவல்துறையினர் பள்ளியில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
News August 13, 2025
விழுப்புரத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று (ஆக.13) நடைபெறுகிறது. இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். மகளிர் உரிமை தொகை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று(ஆக.13) இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.