News September 27, 2024

புதுகை: முகம் சிதறிய ஆண் சடலம்

image

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே முகம் சிதறி உயிரிழந்தார். இறந்தவர் திமுக கரைவேட்டி கட்டியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

புதுகை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு!

image

புதுகை மாவட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

புதுகை: 150 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு!

image

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 150 கிலோ புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று தேனூர்- தேனி கண்மாய் அருகே பொன் னமராவதி தாசில்தார் சாந்தா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!